image 06/Jun/2025

இணுவில் திருவூர் ஒன்றியம்

  • Toronto, Canada
  • 06/Jun/2025

வெள்ளிவிழா காணும் இணுவில் திருவூர் ஒன்றியம்!

கலாநிதி.திரு.ஆறு திருமுருகன் அவர்களின் கனேடிய வருகையும் இணுவில்திருவூர் ஒன்றியத்தின் உதயமும் 2000-2025

இணுவில் திருவூர் ஒன்றியம் தனது 25 வது அகவை பூர்த்தியினை முன்னிட்டுஇவ்ஆண்டு வெள்ளி விழாவில் கால்பதிக்கின்றது. ஒன்றியத்தின் வயதோடு  அதன் வளர்ச்சியும் வருடம்தோறும் வளர்ந்துகொன்டே செல்கின்றது. தளராத முயற்சியும், அர்ப்பணிப்பு  நிறைந்த சேவை மனப்பான்மையும் கொண்ட நிர்வாக குழுவின் பங்களிப்பாலும்  மற்றும் நலன் விரும்பிகளின் செயற்பாடுகளாலும்  ஒன்றியத்தின்  வளர்சிக்கு   உரமாக அமைந்து இன்று விண்ணாக உயர்ந்து நிற்கின்றது.

கனேடிய மண்ணில் இணுவில் திருவூர் ஒன்றியம் உதயமாவதற்கு வித்திடடவர்  செஞ்சொற் செல்வர் -சகோதரர் -சிவபூமி அறக் கட்டளையின் அதிபர் கலாநிதி ஆறுதிருமுருகன் என்றால் அது மிகையாகாது .

ஆறு திருமுருகன்  ஈழத்திருநாட்டில் யாழ்ப்பாணம் இணுவில் மண்ணில் பிறந்து உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழர்களால் நன்கறியப்படடவர் .தமது ஆத்மீக வாழ்வினூடாக, ஆத்மீக சொற்பொழிவினூடாக ,அறப்பணிகளினூடாக இன்று தம்மை நிலைநாட்டியுள்ளார் .

ஆறுதிருமுருகன் இணுவில் கிராமத்தில்  எங்கள் எல்லோருக்கும் உறவினராக விளங்குவதோடு சிறுபராயம் முதல் இத்தகைய பொதுப்பணிகளில் ஈடுபட்டுவருவதை யாம் நன்கறிவோம். 2000 ஆம் ஆண்டு முதல் தடவையாக கனடாவுக்கு திரு ஆறு திருமுருகன்  தமிழர் தகவல் ஆசிரியர் திரு S.திருச்செல்வம்  அவர்களின்  அழைப்பின்பேரில்  வருகை தந்தபோது இணுவில் மக்களாகிய நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்ததோடுமட்டுமன்றி TORONTO-ASHTONBEE கலை அரங்கில் அவருக்கு ஒரு பாராட்டு விழாவையும் சிறப்பாக நடாத்தினோம் .

அந்த விழாவினை தொடர்ந்து இணுவில் மக்கள் பலரும் எமது இல்லத்தில் ஒன்றுகூடி  திரு ஆறு திருமுருகன் அவர்களுக்கு நன்றி செலுத்தியபோது -பல ஊர் மக்களுக்கும்  அந்த ஊரின் பெயரால் லண்டன்  மற்றும் கனடாவில்  சங்கங்கள்  அமைந்தபோது ஏன் இணுவில் மக்களும் ஓர் சங்கத்தை அமைக்ககூடாது ? என்ற கேள்வியை அவர்  முன்வைத்தார்.அப்பொழுது நாம் எல்லாம் ஆவல் பட்டபோது  அவர்  “இணுவில் திருவூர் ஒன்றியம்” என்கின்ற பெயரினை எடுத்துத்தந்து இந்த பெயரிலேயே எம்மை இயங்குமாறு வேண்டினார்கள் .அதற்கமைவாக   திரு.துரையப்பா .நடராஜா , திரு .மயில்வாகனம் -ராஜகுலசூரியர் ,திரு.தங்கராஜா ஸ்ரீஸ் கந்தராஜா,இவர்களோடு நானும் இணைந்து பல பெரியவர்களின் துணையோடு இந்த அமைப்பை உருவாக்குவதற்கு பின்னின்று உழைத்தோம் .இந்த அமைப்புக்கு இன்று 25 வயது பூர்த்தியாகி விட்ட்து வெள்ளிவிழா காணும் கனடா  இணுவில்  திருவூர் ஒன்றியத்தையும் , லண்டன்  இணுவில் ஒன்றியத்தையும் உருவாக்கிய பெருமை கலாநிதி .திரு ஆறுதிருமுருகனையே சாரும் .இவரை பொறுத்தவரை  எங்கள் ஊர் மட்டுமல்ல பல ஊர் மக்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து சிறப்பித்திருக்கின்றார்கள் .குறிப்பாக LONDON ,AMERICA ,New ZEALAND AUSTRALIA ,SWISS,SINGAPORE போன்ற நாடுகள் மாத்திரமன்றி இந்திய மத்திய ,மாநில அழைப்பின் பேரிலும் நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்று சிறப்பித்திருக்கின்றார். இன்றைக்கு கனடாவிலே இயங்குகின்ற இணுவில் திருவூர் ஒன்றியத்திற்கு அவர் சொன்ன புத்திமதிகளுக்கு அமையத்தான்  நாங்கள் பிறந்து ,வளர்ந்து ,கல்வி கற்ற மூன்று பாடசாலைகளுக்கும் வங்கியில் நிரந்தர வைப்புக்கள்செய்வதற்கும், கல்லூரிகளி ன் உயர்ச்சிக்கும்    இவர்தான்  மூலகாரணமாக திகழ்ந்தவர் .அது மட்டுமன்றி இணுவிலிலே அறிவாலயம் அமைக்க வேண்டும் என்ற இவரது வேண்டுதலுக்கிணங்கவே  லண்டன் மற்றும் கனடாவாழ் அன்பர்களால் பேருதவி பெற்று அறிவாலயம் அமைக்கப்பட்ட்து .ஒவ்வொரு தடவையும் இவர் கனடாவிற்கு   வரும்போது இணுவில் திருவூர் ஒன்றியத்தை அவர் கௌரவப்படுத்தி சிறப்புரை யாற்றுவதோடு பலதடவை RICHMOND HILL இந்து ஆலயத்தில் இணுவில் மக்களால் கொண்டாடப்படும் சூரசம்ஹார உற்சவத்தில் பங்கேற்று சொற்பொழிவாற்றி இருக்கின்றார்.

செஞ்சொற்சொல்வர் ஆறு  திருமுருகன் அவர்கள் இணுவில் மக்களுக்கு ஒரு பெருமைமிகு தொண்டனாக விளங்குவது மாத்திரமன்றி ஈழத்திரு நாட்டில் சிவபூமி என்னும் அறக்கட்டளை நிறுவனத்தை நிறுவி மனவிருத்திப் பாடசாலைகள்,முதியோர் இல்லங்கள் ,இலவச வைத்திய சாலைகள் ,விவசாயப்பண்ணைகள் ,மூலிகை தோட்டங்கள் ,கோசாலைகள், மடங்கள் ஆச்சிரமங்கள் அமைத்ததோடும் நின்றுவிடாமல் ,புகழ்பூத்த திருவாசக அரண்மனை, அரும் பொருட் காட்சியகம் திருமந்திர அரண்மனை ,திருக்குறள் வளாகம் என்று அவரது எல்லையற்ற பணிகளால் எம் தாயகத்தின் தவப்புதல்வனாக திகழ்ந்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது.

கனேடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்ட ஒரு தொண்டு அமைப்பாக இன்று சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இணுவில் திருவூர் ஒன்றியம் நாம் கல்வி பயின்ற இணுவையூர் பாடசாலைகளுக்கு ஆதரவு வழங்குவதோடும் நின்றுவிடாமல் இங்கு  கனடாவில்  இடம்பெறும்  பொங்கல்விழா ,பண்ணிசை மற்றும்  -தமிழ் மொழி திறன்காண் போட்டிகள், ஒன்றுகூடல் ,RICHMOND HILL இந்து ஆலய சூரசம்ஹார திருவிழா ஆகிய நான்கு நிகழ்வுகளை சிறப்பாக ஆண்டுதோறும் நடாத்தி ஒரு புகழ் பூத்த நிறுவனமாக கனேடிய மண்ணில் திகழ்ந்து வருகின்றது .

ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக தங்களின் நல் ஆதரவையும் ,ஆலோசனைகளையும் தம் இறுதிவரை வழங்கி எம்மை விட்டு பிரிந்த போசகர்களான திரு.துரையப்பா. நடராசா , திரு .ஆனந்தர் .சுப்ரமணியம் , திரு .தம்பையா .நாகராஜா , திரு .சின்னத்துரை .பரராசசேகரம் ,திரு.தம்பையா.இராசேந்திரம்(கிளி) ஆகியோரை மிகவும் நன்றியோடு நினைவு கூர்ந்து எம் ஆத்மார்த்தமான அஞ்சலியினை செலுத்துவதோடு அதன் உயர்வுக்காக இற்றைவரை உழைத்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும்எங்கள் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

-நன்றி-

இணுவில்  திருவூர் ஒன்றியம்!

அன்புடன்
திரு.அருள்சோதி -கந்தையா
இசைக்கலைமணி -யாழ் பல்கலை கழகம்
இசைக்கலாவித்தகர் -வடஇலங்கை சங்கீதசபை