06/Jun/2025

இணுவில் திருவூர் ஒன்றியம் – ச.வே.பஞ்சாட்சரம்

  • Toronto, Canada
  • 06/Jun/2025

இணுவில் திருவூர் ஒன்றியம்

வெள்ளிவிழா வாழ்த்து

கனடா இணுவில் திருவூர் ஒன்றியம் 25 ஆண்டுகளாக அரிய தமி்ழ், சைவ, சமூகப் பணிகள் ஆற்றிவருகிறது.

கனடாவில் பிறந்துவளரும் இணுவிற் பிள்ளைகளும் தமிழ் சைவப் பண்பாடுகளை அறிந்தும் பழகியும் பின்பற்றவும், தமிழைச் சரளமாகப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் வல்ல பிள்ளைகளாக வளர்த்துவருகிறது.

ஆண்டு தோறும் பல விழாக்கள் நடத்தி எமது பிள்ளைகளின் இசை, நடன, வாத்தியக்கருவிக் கையாட்சி ஆற்றல்களை ஊக்கி வருகிறது.

இதுவரை 20 வரையான நூல் ஆக்கங்களை வெளியிட்டுள்ளது.

நாம் இணுவில் மக்கள் என்ற பெருமிதத்தோடு நாம் இங்கு வாழ இணுவில் திருவூர் ஒன்றியம் தொடர்ந்தும் காலமெல்லாம் பணியாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்

அமைப்பாளர் இணுவில் கலை இலக்கியக் கழகம்

ச.வே.பஞ்சாட்சரம்